ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு.

 

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்கள் புரண்டு வீதியின் குறுக்கே வீழ்ந்ததன் காணரமாக ஹட்டன் - கொழும்பு ஊடாக போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. 

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரம்பாதெனிய விகாரைக்கு அருகாமையில் இன்று (24) 6.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கற்கள் புரள்வு காரணமாக பயணிகள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள் ஆகியோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். 

வீதியில் வீழ்ந்த கற்களை அகற்றும் நடவடிக்கையில் பிரதேச வாசிகள் மற்றும் வீதிஅபிவிருத்தி அதிகார சபை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.