இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இந்தியப் பிரதமருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய போது, இந்த மாநாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

இன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், நிதி அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது. 

பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த மாநாட்டில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.