பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ரத்மலான ரொஹா பலி.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போதே குறித்த நபரை கைது செய்யப்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்டல் ஒன்று மற்றும் 3 இலட்சம் இந்திய ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பலவேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment