Posts

Showing posts from August, 2020

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா.

Image
கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

444 கைதிகள் இன்று விடுதலை.

Image
சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார். 29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 44 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். அவர்களுள் அதிகமானவர்களான 83 பேர் வெலிகட சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் - வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்.

Image
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுபற்றி தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தை கைப்பற்றி பெரமுனவை அனைத்து மக்களுக்குமான கட்சியாக மாற்றுவது கட்சியின் இலக்காகும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாது - சட்டமாதிபர்.

Image
மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்புக்களில் கலந்து கொள்ளவும் முடியாது என்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய இடையே கலந்துரையாடல்.

Image
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொக்டர். மார்க் ரி. எஸ்பர் (Dr.Mark.T.Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசி ஊடாக இன்று தொடர்பினை ஏற்படுத்தி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலின் போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றினை இலங்கை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் சமீபத்திய முடிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தல், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளுநர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம்.

Image
ஊவா மாகாண ஆளுநராக ஏ ஜே எம் முசாமிலும் மற்றும் வட மேல் ஆளளுநராக ராஜா கொள்ளுரேவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

17 சாரதிகளுக்கு 695,000 ரூபா அபராதத் தொகை விதிப்பு.

Image
பல்வேறுபட்ட போக்குவரத்து சட்டங்களை மீறிய 17 சாரதிகளுக்கு 695,000 ரூபா அபராதத் தொகையை செலுத்துமாறு பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிபதி ஜயருவன் திசாநாயக்க கடந்த 26 ஆம் திகதி பணிப்புரை வழங்கினார். பலாங்கொடை பொலிஸ் பிரிவில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை- குடிபோதையில் வாகனம் செலுத்தியமை- மற்றும் காப்புறுதி சான்றிதழ் இல்லாமல் வாகனத்தை செலுத்தியமை அல்லது எவ்வித ஆவணமும் இன்று வாகனம் செலுத்தியமை உட்பட பல்வேறுபட்ட குற்றங்களுக்காக சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமயம் குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

ஈசி கேஷ் மூலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மாணவன் கைது.

Image
பலாங்கொடை பகுதியில் ஈசி கேஷ் (Easy Cash) மூலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவரை ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் மாணவன் என்பது தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய நபர் ஒருவரையும் பொலிஸார் சூட்சுமமான முறையில் கைது செய்துள்ளனர். இரண்டாவதாக கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த கார், நான்கு வங்கி அட்டைகள் மற்றும் நான்கு கைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியான வறட்சி... திருகோணமலை மாவட்ட குளங்களின் நிலை.

Image
தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால்  திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் உள்ள பல குளங்கள் வற்றிய நிலையில் காணப்படுவதோடு கால்நடைகளுக்கான உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதனால் விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பல சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இந்த பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்வதாகவும் தற்போதைய காலநிலை மாற்றங்கள் தமது வாழ்வாதாரத்தினை பாதிக்கின்றன என கருத்து தெரிவிக்கின்றனர்.

2 மோட்டார் சைக்கிள்கள் மீது மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்.

Image
2 மோட்டார் சைக்கிள்கள் மீது  மரமொன்று  முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம். முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பாரிய மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேற்படி விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முல்லைத்தீவு அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 23 மற்றும் 33 வயது நபர்களே இறந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில்.

Image
உத்தேசிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ஆராய நீ அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக அமைச்சர்கள் சிலர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்தது .

Image
நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச்செயல் மற்றும் போதைபொருள் கடத்தல் தொடர்பான குற்றச் செயல்களை முழுமையாக இல்லாதொழிப்பது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் காணப்படுவதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலுக்கான பணப் பரிமாற்றம்  பெரும்பாலானவை தொலைபேசிகள் மூலமாகவே இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளர். இந்த விடயம் சம்பந்தமாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.

Image
சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 821 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அவர்களில் இந்தியாவில் உள்ளவர்களுக்கே அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 79 ஆயிரத்து 457 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் சர்வதேச ரீதியில் 4 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 76 லட்சத்து 98 ஆயிரத்து 622 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு பிரத்தியேக பஸ் விரைவில்.

Image
சிசு செரிய – பாடசாலை மாணவர்களின் பஸ் சேவைக்கு பயன்படும் பஸ்களை நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது. தற்போது 10 பஸ்களுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணைவாக இந்நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது. இவற்றை மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே இவ்வாறு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களின் விலை அதிகரிப்பு.

Image
நாட்டில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலையேற்றத்திற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதியளவு வாகனங்களின் இறக்குமதியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்கள் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது அதிகளவு பணத்தை செலவிடுவது அநாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் போதியளவு வாகனங்களின் இறக்குமதி இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு.

Image
நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ந்த புதிய தளர்வுகளுக்கு அமைவாக நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் வளாகத்தையும் ஏற்கெனவே கொரோனா வைரஸ் பரவல் காலத்திற்கு முன்னர் இருந்தது போலவே முழு நேரமும் திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. ப ள்ளிவாசல்களில் அமைந்துள்ள தண்ணீர் குழாய்களையும் கழிப்பறைகளையும் வழிபாட்டாளர்களின் பாவனைக்காக திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தண்ணீர்த் தொட்டிகளைத் தொடர்ந்தும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் சுகாதார அதிகாரியின் வழிகாட்டுதல்களையும் வழிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறும் அந்த அறிவுறுத்தலில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டு நடவடிக்கைகளும் ...

இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா!

Image
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 948 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 35 லட்சத்து 42 ஆயிரத்து 734 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 948 பேர் உட்பட கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,498 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,935 உட்பட இந்தியா முழுவதும் 27,13,934 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 7,65,302 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 76.61% ஆகவும், இறப்பு விகிதம் 1.79% ஆகவும் உள்ளது. உலகளவில் கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிட...

தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் உதவியை நாடும் சம்பந்தன்.

Image
அரசியலமைப்பின் 20 ம் திருத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை இல்லாமல் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடன் முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த  வாரம் இலங்கைக்கான  அமெரிக்க தூதுவரை தனது திருகோணமலை இல்லத்தில் சந்த்தித்து பேசிய போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – அர்ஜுன ரணதுங்க.

Image
கட்சி தீர்மானிக்குமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹர கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா.

Image
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மாலைத்தீவில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2998 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 126 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு.

Image
நாட்டில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தினூடாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் தரவுகளூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த மோசமான நிலைமை அண்மைக் காலங்களாக படிப்படியாக அதிகரிப்பதாக தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். அறிவியல் கணக்கெடுப்பின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3,600 HIV தொற்றுக்குள்ளானோர் இருத்தல் வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 2,000 பேர் வரையிலேயே கிளினிக்கிற்காக பதிவு செய்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். ஏனைய 1,600 பேரும் தமக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறித்து அறியாமல், சமூகத்தில் ஏனையவர்களை தொடர்பு கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், ஆரோக்கியமானவர்களும் இத்தகையோரால் பாதிக்கப்படக்கூட...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள்.

Image
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 8,558 முறைப்பாடுகள் பதிவானதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், ஒப்பீட்டளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் விருந்து- போதைப்பொருட்களுடன் 28 பேர் அதிரடியாக கைது.

Image
காலி-அக்மீமன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு.

Image
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8.46 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிப்படைந்தோர் - 25,164,818 கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தோர் - 846,757 கொரோனா வைரஸால் இதுவரை குணமடைந்தோர் - 17,507,516

கண்டி -ஹாரகம பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய தேவை இல்லை.

Image
கண்டி -ஹாரகம பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய தேவை இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். கண்டி – தலவத்துஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் 29 இரவு 8.30 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அவ்வாறான நிலநடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது எனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

விமானநிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசு கவனம்.

Image
கொவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் தற்போது சம்பந்தபட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் 19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு வருவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரிக்க மாட்டோம் என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா.

Image
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நால்வர், லெபனனில் இருந்து வருகை ஒருவர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2995 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,849 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 134 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில மருந்து வகைகளின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம.

Image
சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமென ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக தினமும் 80 முதல் 100 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர்.

Image
போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாடு  காரணமாக தினமும் 80 முதல் 100 வரை இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டிற்கு போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “போதைப்பொருள் மற்றும் புகையிலை கட்டுப்பாடு குறித்து 1000 மருத்துவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு திட்டத்தை தனது சங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை முழுவதும் இந்த திட்டத்தை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்த சுகாதார அமைச்சகம், தேசிய புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆணையம், தேசிய ஆபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கல்வி அமைச்று மற்றும் பிற பொறுப்புள்ள அமைப்புகளை ஒன்றிணைக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பதவி விலகும் பிரதமர் ஷின்சோ அபே.

Image
பதவி விலகும் பிரதமர் ஷின்சோ அபே  ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சுகாதார பிரச்சினைகள் காரணமாக பதவி விலகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உடல்நலக் குறைவுக்கு மத்தியில் பிரதமர் அபே இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடவுள்ள நிலையில் இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 2 ஆம் முறையாக ஜப்பான் பிரதமராக பதவி ஏற்ற பின் அபே 2,799 நாட்களை வெற்றிகரமாக அப்பதவியில் கடந்து சாதனை படைத்துள்ளார். அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே 2007 ஆம் ஆண்டு உடல் உபாதை காரணமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுற்று வரும் அபே, தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் இடம் பெற உள்ள பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்.

Image
★ புலமை பரீட்சை ஒக்டோபர்-11, ★GCE A/L பரீட்சை ஒக்டோபர்-12, ★GCE O/L பரீட்சை ஜனவரி-18 ல் ஆரம்பம்.

ஒரே பிரசவத்தில் 5 பெண் பிள்ளைகள் பிறப்பு.

Image
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை தாய் ஒருவர் இன்று (28) பெற்றெடுத்துள்ளார். 5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவை 5 உம் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.

O/L பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு.

Image
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பள்ளிவாயல்களில் துப்பாக்கி சூடு நடத்தி 51 பேரை கொன்றவனுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.

Image
நியூசிலாந்தின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் பள்ளிவாயலுக்கு தொழ வந்த  51 முஸ்லிம்களை  கொலைசெய்த நபருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது போன்ற தண்டனை நியூஸிலாந்தில் வழங்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும். 29 வயதான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ரெண்டன் டாரன்ட் என்ற மேற்படி குற்றவாளி, 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத செயலைச் செய்ததாக  ஒப்புக் கொண்டான். தண்டனையின் போது அவன் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளார். ப்ரெண்டன் டாரன்ட், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் தென் தீவு நகரமான கிறிஸ்ட்சர்ச்சில் அமைந்துள்ள இரு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் மீது மூர்க்கத்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டான். அத்துடன் அவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் காட்சியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பினான். இரண்டு மசூதிகளில் நடந்த இந்த துப்பாக்கி தாக்குதல்கள் உலகம் முழுவதும் அத...

கொழும்பில் வாகன நெரிசலுக்கு தீர்வாக ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, உத்தரானந்த மாவத்தையில் இரு மேம்பாலங்கள்.

Image
கொழும்பு கொம்பனிவீதி பிரசேத்தில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக இரண்டு மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொம்பனிவீதி ரயில் நிலையத்துக்கு அருகில் ஜஸ்டிஸ்  அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதியில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 6 பில்லியன் ரூபாய் செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். உத்தரானந்த மாவத அருகே கட்டப்படும் மேம்பாலம்   நீளம் 420 மீட்டர் , நீதிபதி அக்பர் மாவத அருகே 350 மீட்டர்  நீள மேம்பாலம் அமைக்கப்படும். ஸ்லேவ் ஐலன்ட் , கொழும்புக்குள் மிகவும் நெரிசலான பகுதியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த திட்டத்தை நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்தார்

திருமண வயது தொடர்பில் புதிய சட்ட மூலம்.

Image
9 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது தனிநபர் பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் சமர்பித்துள்ளார். இந்த பிரேரணையை நேற்று (26) பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசாநாயக்கவிடம் கையளித்தாக பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். திருமணம் முடிப்பதற்கான வயதெல்லை 18 ஆக நிர்ணயிப்பது இந்த பிரேரணையின் நோக்கம் என அவர் கூறினார். எந்த இனமானாலும் எல்லோருக்கும் பொதுவான சட்டம் என்ற வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டத்தை வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்கான அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி பெண்.

Image
டுபாய் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதுடைய குறித்த பெண், டுபாய் நாட்டில் இருந்து தயாகம் திரும்பியதனை தொடர்ந்து, தனிமைப்படுத்தலின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பங்கதெனிய பிரதேசத்தினை சேர்ந்த குறித்த பெண், தற்போது முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கான சீருடை வவுசர்கள் செப்டெம்பர் 30 வரை செல்லுபடியாகும்.

Image
சகல அரசு பாடசாலைகளிலும் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வழங்கப்பட்ட வவுச்சர்கள் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணத்தால் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு வவுச்சர்கள் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தளை நகர ச​பை மேயர் பதவியில் இருந்து நீக்கம்.

Image
மாத்தளை நகர ச​பை மேயர் பதவியில் இருந்து டல்ஜித் அலுவிகார நீக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாண ஆளுநரினால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர மேயர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடியதாக புதிதாக 2,600 இடங்கள்.

Image
சுற்றுலாத்தொழில் துறைக்காக இதுவரையில் பயன்படுத்தப்படாத மற்றும் சுற்றுலா தொழில் துறையை கவரக்கூடிய 2,600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ண ரணதுங்க தெரிவித்துள்ளார். விமான நிலையங்களை திறந்து துற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரும் சந்தர்பத்தில் இந்த 2,600 சுற்றுலா இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானத்தின் மூலம் ஒரே முறையில் ஆகக்கூடிய சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரக்கூடிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்.

Image
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்த இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (26) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மீள அறிவிக்கப்படும் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு பூட்டு.

Image
கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக மீள அறிவிக்கப்படும் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரியை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பிரிவின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைப் பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர ப்ரனாந்து தெரிவித்தார். பாராளுமன்ற பொதுமக்கள் கலரியை மீண்டும் திறப்பது தொடர்பான திகதி சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது.

Image
பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 42 கிலோகிராம் ஹெரோயின், மூன்று டி56 ரக துப்பாக்கிகள், 170 ரவைகள் மற்றும் 9 மில்லிமீற்றர் அளவுடைய கைத்துப்பாக்கி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 18 மாத காலப் பகுதியில் 23,745 வழக்குகள் நிறைவு.

Image
கடந்த 18 மாத காலப் பகுதியில் மாத்திரம் 23,745 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப் பகுதியில் 12,053 குற்றப் பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி.

Image
தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, 22 கரட் தங்கம் ஒரு பவுன் 91 ஆயிரம் ரூபாவிற்கும் 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 99 ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த 8 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 109,500 ரூபாவிற்கும் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 100,500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பிரதேசத்தில் இரண்டு தலைகள், நான்கு கண்கள் கொண்ட விசித்திர ஆட்டுக்குட்டி.

Image
புத்தளத்தில் இரண்டு தலைகள், நான்கு கண்கள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று இந்த அபூர்வ ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியுடன் மேலும் இரு குட்டிகள் பிறந்துள்ளன. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரினால் வளர்க்கப்படும் ஆடு ஒன்றே அபூர்வ குட்டியை பிரசவித்துள்ளது. நேற்று காலை பிறந்த இந்த அபூர்வ ஆட்டுக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். விசித்திரமான தோற்றத்துடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டியை பார்வையிட அந்தப் பகுதி மக்கள் பெருமளவு வந்து செல்கின்றனர். ஆட்டுக்குட்டியை நன்றாக பார்த்துக் கொள்வதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

இணைப்பு : காத்தான்குடி பிரதேச மர ஆலையில் தீப்பரவல். இரண்டு கோடி ரூபாய் வரையில் சேதம்.

Image
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச மர ஆலை  ஒன்றில் தீபரவியுள்ளது. இன்று அதிகாலை 3:30 மணியளவில்  இவ்வாறு தீபரவியுள்ளது. மட்டக்களப்பு நகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் காவற்துறை பொது மக்கள் இணைந்து தீயணைப்பினை மேற்கொண்டுள்ளனர். இந்த தீப்பரவல் காரணமாக   இரண்டு கோடி ரூபாய் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீபரவலுக்கு இதுவரை காரணம் அறியப்படாததுடன் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஐ.தே.க யின் செயற்குழு கூட்டம் நிறைவு - புதிய தலைவர்?

Image
இன்று (25) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் குறித்து எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (25) பிற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்.

Image
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் புதிதாக 12 பேருக்கு கொரோனா.

Image
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,971 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் மேலும் 05 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (24) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,816 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 143 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.