Posts

Showing posts from September, 2020

அரசாங்கத்திடம் இருந்து மற்றுமொரு சலுகை.

Image
  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள், வாசஸ்தலங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ஒரு வருட சலுகைக் காலம் வழங்குமாறு பிரதேச பொறியியலாளர் காரியாலயங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 31 வரையான கட்டணங்களை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டாமெனவும் பிராந்திய பொறியியலாளர் காரியாலயங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. GeeksforGeeks Show More and Show Less Example GeeksforGeeks was born out of necessity- a need to provide a convenient and one-stop educational portal to all the students of Computer Science. ... This necessity was as personal to me as it was universal. This need combined with my pa...

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்குரிய பாடசாலை விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது.

Image
  அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய பாடசாலை விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி பாடசாலைகள் நிறைவடையவுள்ளதோடு மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

( TRCSL ) பதிவு செய்யப்படாத புதிய மொபைல்களில் உள்ள சிம் அட்டைகள் நாளை முதல் செயலிழக்கப்படும்.

Image
  நாளை (01) முதல் தொலைத்தொடர்பு  நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் புதிய  மொபைல் தொலைபேசிகள் , சாதனங்களை கொள்வனவு செய்யும்போது  TRCSL அனுமதி / பதிவு உள்ளதா என  சரிபார்க்கப்பட வேண்டும் என்று இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRCSL )   அறிவித்துள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய  இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனநாயக்க,  தொலைத்தொடர்பு   மொபைல்  நெட்வொர்க்கில் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் கார்டுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு , மொபைல் தொலைபேசிகளுக்கு  விலக்கு அளிக்கப்படும் என்றார். மொபைல்  சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ( http://www.trc.gov.lk ) வழியாக பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது . தொலைத் தொடர்புத் துறையில் நடைபெற்று வரும் பன்முக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக சந்தை இடத்தின் நிலைமைகளின் அடிப்படையில் தொலைத் தொடர்பு விதிமுறைகள் வேறுபடுகின்றன. எனவே, TRCSL  வழங்கிய விற்பனையாளர் உரிமம் வைத்திருக்கும் விற்பனையாளர்களிடமிருந்து சிம்...

தபால் திணைக்களத்திற்கு வருடத்திற்கு 600 கோடி ரூபா நட்டம் !!

Image
  இலங்கை தபால் சேவை தனது சேவையின் நோக்கத்தை இனங்கண்டுக் கொண்டால் தேசிய பொருளாதாரத்தில் பிரதான பங்குதாரராக மாற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  தபால் சேவையிடம் காணப்படும் பாரியளவிலான வளங்களை உரிய வகையில் முகாமை செய்வதன் ஊடாக குறித்த இலக்கினை இலகுவாக அடைய முடியும் என தபால் சேவை மற்றும் வெகுஜன ஊடக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்.  வருடம் தோறும் தபால் திணைக்களத்திற்கு 06 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக குறித்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.  இதேவேளை, ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன் வளர்ச்சிக்காக பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்கும் பத்திரிக்கை சட்டத்தில் திருத்ததை மேற்கொள்ளவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.  வௌிநாட்டு நாடகத் தொடர் ஔிபரப்பின் போது அறவிடப்படும் வரியினை மீண்டும் செயற்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் வீட்டில் 3 கோடி ரூபா கொள்ளை.

Image
  கட்டான - அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கார் ஒன்றில் வந்த 5 பேர் அடங்கிய கும்பலினால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கெளரவத்துக்குரிய குவைத் தலைவரின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்...இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Image
  குவைத் மன்னர் ஷேக் சபாவின் உயிரிழப்புக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கெளரவத்துக்குரிய குவைத்தின் எமிரான ஷேக் சபா அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந் நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.

Image
  சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,840,328 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,012,603 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 25,144,012ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவைட் அதிபர் (அமீர்) ஸபாஹ் அல்-அஹ்மத் அல்-ஜபீர் அல்-ஸபாஹ் வபாத்தானார்.

Image
  குவைத் ,நாட்டின் ஆளும் அமிர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் சபா இன்று மாலை வபாத் தானார். இதனை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவாகரத்தில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டார்.

Image
  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் சகோதாரனா றியாஜ் பதியுதீன் இன்று (29) செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பினை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்.

Image
  20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  செயற்குழு கூட்டத்தின்போது எடுத்த திருத்தங்கள் அடங்கிய எழுத்து மூலமான பத்திரம் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் தற்போது குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்று வருகிறது.

மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

Image
  மாட்டிறைச்சியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தேவையான  இறைச்சியை இறக்குமதி செய்வதற்கும் அதனை நிவாரண விலைக்கு வழங்குவதற்கும் அவசியமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் அரசாங்கம், அதேவேளை உடன் அமுலுக்குவரும் வகையில் நாட்டில் பசுவதை தடை செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கையில் பசுவதையைத் தடைசெய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.   நாட்டில் பசுவதையை தடைசெய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு.

Image
  மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நானுஓயா  பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது. நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்து வந்த மகேந்திரன் யசோதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (28) இரவு, 10.30 மணிவரை குறித்த மாணவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனினும், தாம் நித்திரைக்கு சென்று அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், முன்னெடுக்கப்பட்ட  தேடுதல் நடவடிக்கையை அடுத்து, மாணவியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி.

Image
  இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.  இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:  விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும்.  பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகா...

மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5 மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது.

Image
  மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5 மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். 5 மாடி கட்டி டம் இடிந்து விழுந்ததில் ஒரே குடுமபத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே அனுர லேவுகே எனப்படும் குறிப்பிட்ட கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மாடறுப்பு தடை சட்டம் தொடர்பான யோசனைக்கு கபினட் அனுமதி.

Image
  மாடறுப்பு க்கு தடை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விடயத்தை மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சர்கள் அமைச்சரவை கூடியது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே  செப்டம்பர் 08 அன்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது  மாடருப்பு தடை விதிக்க முன் மொழிந்து இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் அந்தந்த குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என தெரிவிக்கப் படுகிறது.

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகள்.

Image
  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 'மென்டி' யுடன் மதுவரி திணைக்கள அதிகாரி உட்பட இருவர் கைது.

Image
  மென்டி எனும் போதைப்பொருளுடன் ஜயவர்த்தனபுர பிரதேசத்தை சேர்ந்த  இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று.

Image
  20ம் திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமாகவுள்ளது. ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை ஆரம்பமாகவுள்ளது. இந்த மனுவை சவாலுக்குட்படுத்தி 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள், சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர் ரத்னஜீவன் ஹ_ல், சட்டத்தரணிகள், அமைப்புக்கள் அடங்கலாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 20 ஆம் திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 10 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான இந்த குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ, அமைச்சர் மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரான சான் விஜயலால் டி சில்வா, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சட்டத்தரணிகளான ச...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் வெளியான செய்தி.

Image
  அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைக்கான வவுச்சர் முறைமைக்கு பதிலாக சீருடை துணியினை வழங்க அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பினை மீறி, அதிக விலையில் தேங்காயை விற்பனை செய்த 56 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை.

Image
  வர்த்தமானி அறிவிப்பின் படி நியமிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் தேங்காயை விற்பனை செய்த 56 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கை... 1481 க்கும் அதிகமானவர்கள் கைது.

Image
  கடந்த சில மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,481 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 514 பேர் போதைக் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 326 பேரும் வீசா காலவதியான நிலையில் தங்கியிருந்த 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

20 க்கு எதிராக நாளை வரை மனு தாக்கல் செய்ய முடியும்.

Image
  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 22 ஆம் திகதி 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தின் முன்வைத்தார்.  அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தை நாட கடந்த ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டது.  அதற்கமைய 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்த்து 20 க்கும் குறைவான மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  தீர்ப்பை வழங்க 21 நாட்கள் உயர் நீதிமன்றத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இந்த காலப் பகுதியில் குறித்த சட்டமூலம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் பாராளுமன்றத்தால் எடுக்க முடியாது.  இதேவேளை, இன்றைய தினம் (28) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்.

Image
  சிங்கள சினிமாத் துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரே இன்று (28) காலமானார்.  உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 ஆகும்.

நிவ் டயமண்ட் கப்பலின் தலைவருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை.

Image
  எம் ரி நிவ் டயமண்ட் கப்பலின் தலைவரை விளக்கமறியலில் வைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு அவருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது.

Image
  கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதிக்கு பின்னர் இன்று 6000 புள்ளிகளை கடந்துள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 2498.52 புள்ளியாக இன்று (20) பதிவாகியுள்ளது.  மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 6028.20 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவைவெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு இரண்டாம்.

Image
  கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.  சீன முதன்மை புலனாய்வு ஆய்வு நிறுவனமான ´இகாயி´ நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.  தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தமை, பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பியமை மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  108 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சீனாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி சீனா, இலங்கை, தென்கொரியா, மியன்மார், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் கானா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

1,024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு.

Image
  மன்னார் - பேசாலை - பெரிய கரிசல் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுமார் ஆயிரத்து 24 கிலோ கிராம் மஞ்சள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த மஞ்சள் தொகை இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மஞ்சள் தொகை பாரவூர்தியில் கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்.

Image
  போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயமுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்தகைய மாணவர்களை பாடசாலை கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார். பாடசாலைக்கு செல்லவேண்டிய வயதில் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்போது கண்டறியப்படும் மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் தொடர்பிலான விசேட விசாரணைகளை மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகளே அதிகளவில் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளமை தெரியவந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் கூறியுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலின் 17 பணியாளர்களுக்கு கொரோனா.

Image
  திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் உள்ள பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டமை அடையாளம் காணப்பட்டதையடுத்து, அனைத்து ஊழியர்களுக்கும் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 4,000 மெற்றிக் தொன் எரிபொருளை தாங்கிய குறித்த கப்பல், திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்திற்கும் சென்றிருந்ததாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கப்பலையும் ஊழியர்களையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐசிசி தலைமையகத்தில் சில ஊழியர்களுக்கு கொரோனா.

Image
  ஐசிசி தலைமையகத்தில் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன் காரணமாக ஐசிசி தலைமையகம் மறு அறிவித்தல் வரையில் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

Image
  எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால் முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார். ஒரு வருடத்தின பின்னர், அந்த சாரதிகள் மருத்துவ பரிசோதனை முடித்ததும் அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.

குவைத்தில் இலங்கை தூதரகம், அக்டோபர் 11 வரை மூடப்படும் என அறிவிப்பு.

Image
  ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டதை, அடுத்து 40 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு  உள்ளாக்கப்பட்டது டன் குவைத்தில் இலங்கை தூதரகம், அக்டோபர் 11 வரை மூடப்படும்்் என அறிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை.

Image
  சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் இல்லை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 7 வாரங்களில் நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதனூடாக நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இல்லாமற்போயுள்ளது என அர்த்தப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ஆகவே, சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்தும் பின்பற்றுதல் அவசியம் என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் நேற்று (25) அடையாளங்காணப்பட்டனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர், கட்டாரில் இருந்து திரும்பிய அறுவர், அல்பேனியாவில் இருந்து வருகை தந்த கப்பல் ஊழியர் மற்றும் யுக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மூவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய...

கொரோனா தடுப்பூசி தயாராவதற்குள் 20 இலட்சம் பேர் இறக்கக்கூடும்: உலக சுகாதார நிறுவனம்.

Image
  கொரோனா தடுப்பூசி தயாராவதற்குள் உலக அளவில் 20 இலட்சம் பேர் இறக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலொன்றை வௌியிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 9,94,016 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், நேற்று (25) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான், கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான சாதகமான சூழலைப் பார்க்கும்போது தடுப்பூசி தயாராவதற்கு முன்பே 20 இலட்சம் மக்கள் கொரோனாவால் பலியாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், உலகத் தலைவர்கள் உயிர் காக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயற்படுவதின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என குறிப்பிட்டார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷ்யாவில் கடந்த மாதம் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். அமெரிக்காவும் தடுப்பூசி ...

உக்ரைனில் இராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 22 வீரர்கள் உயிரிழப்பு.

Image
  உக்ரைனில் விமானப்படை வீரர்களை ஏற்றிச்சென்ற இராணுவ விமானம் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியதில் 22 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவ விமானத் தளத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உக்ரைனின் மாநில அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நேற்று (25) மாலை விமானப்படை வீரர்களை ஏற்றிச்சென்ற AN-26 என்ற இராணுவ விமானம் வடகிழக்கு உக்ரைனின் தேசிய நெடுஞ்சாலை அருகே வெடித்துச் சிதறி விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 22 வீரர்களும் உயிரிழந்ததாக ஆயுதப்படை ஊழியர் ரஸ்லான் தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக விமானம் வீழ்ந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததை அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று.

Image
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு மாநாடு இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இந்தியப் பிரதமருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய போது, இந்த மாநாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.  இன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், நிதி அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.  பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த மாநாட்டில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய்க்கான அதியுச்ச விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு.

Image
  தேங்காய்க்கான அதியுச்ச நிர்ணய விலையை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும் 12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாவிற்கும் 12 அங்குலத்திற்கும் குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 கிலோ சிறுத்தை இறைச்சியுடன் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பொலிசாரால் கைது .

Image
  கண்டி உடதும்பர பிரதேசத்தில்  நேற்று சிறுத்தையை கொன்ற   குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 17 கிலோ எடையுள்ள  சிறுத்தை  இறைச்சி, அதன் சடலத்தின் பல்வேறு பாகங்கள், கத்தி மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றுடன் கலகமுவாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விலங்கு 10-14 வயதுக்கு இடைப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் கருதுகின்றனர். கலகமுவாவில் வசிக்கும் ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களும் இன்று தெல்தெனிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி.

Image
  கடந்த அகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் தேயிலை உற்பத்தழயானது 14 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அகஸ்ட் மாதத்தில் மேயிலை உற்பத்தியின் பெறுமதி 22.42 மில்லியனாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

05 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்.

Image
  20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 05 பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கறித்த மனு மீதான விசாதணைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் உர தட்டுப்பாட்டுக்கு தீர்வு.

Image
  நாட்டில் தற்பொழுது நிலவும் உர தட்டுப்பாடு இரண்டு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றம் இன்று (24) காலை கூடிய போது பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உர பிரச்சினை தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்தார்.  நாட்டில் தற்பொழுது 120,610 ஏக்கர் வயல் நிலத்தில் தற்பொழுது உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், 10 இலட்சத்து 5,100 வயல் காணியில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  விவசாய துறையை மேம்படுத்துவதற்காக அடுத்த வருடத்தில் நாடு முழுவதிலும் விவசாய உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.  இதன் கீழ் ஒரு விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு தலா 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

புதிய 1000 ரூபா தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

Image
  புதிய 1000 ரூபா தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லட்சுமன் ,நிதியமைச்சர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அதனை கையளித்தார்.

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை.

Image
  அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விலைக்கு அதிகமாக சில வர்த்தகர்கள் அரிசியை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை இதனை மேற்கொண்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக நாட்டரிசி ஒரு கிலோவின் ஆக கூடிய விலை 96 ரூபாவாகும். சம்பா அரிசி கிலோ ஒன்றிற்கு 96 ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கீரி சம்பா ஒரு கிலோ 120 ரூபா எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MT NEW DIAMOND கப்பல் காரணமாக கடல் மாசடைந்துள்ளமை உறுதி.

Image
  தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND எரிபொருள் கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  குறித்த அறிக்கையில், MT NEW DIAMOND கப்பலில் இருந்து கசிந்த எரிபொருள் காரணமாக கடல் மாசடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மேலும் 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என New Diamond கப்பலின் உரிமையாளரிடம் கோரிக்கை விடப்பட்டது.

Image
  தீ விபத்துக்குள்ளான "MT New Diamond" கப்பல் மூலமாக இலங்கைக்கு  340 மில்லியன் ரூபா நஷ்டஈடு வேண்டும் என சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக  கப்பலின் உரிமையாளர் இலங்கைக்கு 340 மில்லியன் ரூபா  வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது அறிந்ததே. இந்நிலையில் மேலும் 100  மில்லியன் ரூபா இலங்கைக்கு வழங்க வேண்டும் என  சட்டமா அதிபரினால்   கப்பலின் உரிமையாளரிடம் கோரிக்கை விடப்பட்டது.

விசேட வர்த்தமானி மூலம் இரத்து செய்யப்பட்டுள்ள மஞ்சளுக்கான நிர்ணய விலை.

Image
  மஞ்சள் ஒரு கிலோகிராமிற்கான அதியுச்ச விற்பனை விலை 750 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி விசேட வர்த்தமானி மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளது

A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்.

Image
  ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  பரீட்சைத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.  அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்களையும் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு முதல் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து விதமான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளும் தடை செய்யப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரிசி விலை அதிகரிப்பிற்கு இதுவா காரணம்.

Image
நெல் ஆலைகளுக்கு நெல் கிடைக்காமை காரணத்தினால் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனால் அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த போது சந்தையில் அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது. சந்தையில் காணப்படும் குறித்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன் நெல் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும், அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நெல் இறக்குமதி செய்வது தொடர்பிலான கருத்துக்கள் முன் வைக்கப்படடன. இதேவேளை கடந்த சில நாட்களாக சந்தையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதால் சலுகை விலையுடன் நுகர்வோருக்கு தேங்காயை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டமொன்றை பெருந் தோட்டத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய கொழும்பை அண்டிய பிரதேசங்களில் பாரவூர்தி போன்ற வாகனங்களை பயன்படுத்தி 60 ரூபாவிற்கு தேங்காய் வழங்கும் வேலைத் திட்ட...

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு.

Image
  ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்கள் புரண்டு வீதியின் குறுக்கே வீழ்ந்ததன் காணரமாக ஹட்டன் - கொழும்பு ஊடாக போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.  கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரம்பாதெனிய விகாரைக்கு அருகாமையில் இன்று (24) 6.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  குறித்த கற்கள் புரள்வு காரணமாக பயணிகள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள் ஆகியோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.  வீதியில் வீழ்ந்த கற்களை அகற்றும் நடவடிக்கையில் பிரதேச வாசிகள் மற்றும் வீதிஅபிவிருத்தி அதிகார சபை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ரத்மலான ரொஹா பலி.

Image
  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.  நேற்று இரவு நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்போதே குறித்த நபரை கைது செய்யப்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.  இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.  குறித்த நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்டல் ஒன்று மற்றும் 3 இலட்சம் இந்திய ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த நபர் பலவேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.