Posts

Showing posts from May, 2020

இறுதி நேரத்திலும் ஆறுமுகன் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகவே செயற்பட்டார்: வாசுதேவ நானயக்கார

Image
இறுதி நேரத்திலும் ஆறுமுகன் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகவே செயற்பட்டார்: வாசுதேவ நானயக்கார WhatsApp:- https://chat.whatsapp.com/GNebzv66w6v9sbTAeHOIvw அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது இறுதி நேரத்திலும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகவே செயற்பட்டுள்ளார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டு என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு வருடகாலமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1000ரூபாவை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டு வந்தார். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நாட்கூலி 1000ரூபாய் வழங்கப்படுவதுடன் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக குறைந்தபட்சம் 2000ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்காக தனது ...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் செய்யத் முகம்மது இன்று காலமானார்கள்.

Image
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் செய்யத் முகம்மது அவர்கள் இன்று (03/05/2020) பிற்பகல் காலமானார்கள். ஆழ்ந்த அனுபவம். நிதானமான பேச்சு. மறக்க முடியாத ஆளுமை. நான் எப்பொழுது இலங்கை சென்றாலும் மௌலானாவை சந்திக்காமல் வந்ததில்லை. இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் மஹிந்தவின் கூட்டம்.

Image
எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராமன்ற உறுப்பினர்கைள இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இன்று காலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 225 முன்னாள் பாராளுமன்ற உப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிரணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முக்கணி ஆகிய கட்சிகள் பிரதமர் தலைமையிாலன இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மற்றும் அதனை நிராகரிக்கும் அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் ஆகிய சர்ச்கைகளுக்கு மத்தியிலேயே இன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமைய...

இலங்கையில், இதுவரை 324 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

Image
இலங்கையில், இதுவரை 324 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 718 பேரில் 324 பேர் கடற்படை வீரர்கள் ஆவர். நேற்று அடையாளம் காணப்பட்ட 13 பேரில் வெலிசற கடற்படை முகாமை சேர்ந்த 11 கடற்படை வீர்களும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது.

Image
குற்றக்கோவை தண்டனைச்சட்டத்திற்குட்பட்ட 33 குற்றச் செயல்களுக்கு புறம்பான குற்றச் செயல்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை 7 ஆம் திகதி வெசக் போயா தினத்தன்று இந்த கைதிகளை விடுதலை செய்ய இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் எம்.ஜி.டப்லியூ.தென்னகோன் தெரிவித்தார். இதைத்தவிர பிணை செலுத்த முடியாமல் இருக்கும் சிறு குற்றங்களை புரிந்த கைதிகளையும் விடதலை செய்ய இருப்பதுடன்இ இன்னும் சில கைதிகளுக்கு மன்னிப்புக்காலம் வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மே மாத ஓய்வூதியக் கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபா இன்று முதல் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு.

Image
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தற்போதைய நிலைமை கருதி மீண்டும் இன்று முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட இந்தக் கொடுப்பனவின் 2 ஆம் கட்டம் இதன்படி இன்றைய தினம் முதல் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாவதுடன், வெசக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் வழங்கி முடிக்கப்படும். வயோதிபர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மார்ச் மாதம் முதல் நபர் ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் வீதம் வழங்குவதற்கு ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவினருக்கான மூல ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப் போன்றே காத்திருப்பவர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் கொடுப்பனவுகள் உரித்தாகும். மே மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குதல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம...

இஸ்ரேல் பாலஸ்தீனுடனான பல எல்லைகளை தற்காலிகமாக திறந்துள்ளது.

Image
பாலஸ்தீனிய ஆணையகத்துடனான ஒரு ஒப்பந்தத்தையடுத்து இஸ்ரேல் பாலஸ்தீனுடனான பல எல்லைகளை தற்காலிகமாக திறந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்சத்துக்கு மத்தியில் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு வேலைவாய்ப்புகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இரண்டு நாள் எல்லை திறப்பு நடவடிக்கையானது திங்கள் முதல் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 40 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் தொழில்வாய்ப்புகளுக்காக இந்த எல்லையை கடந்து, இஸ்ரேலுக்குள் நுழைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனிய ஆணையகம் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கிடையிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலுக்குள் நுழையும் தொழிலாளர்கள் மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வழமையாக தொழில் வாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குள் நுழையும் தொழிலாளர்கள் ஒரே நாளில் திரும்பி சென்று விடுவார்கள். எனினும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே அவர்களுக்கு இவ்வாறு மூன்று வாரம் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் விவசாயம் மற்று...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

Image
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. நாளை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு பேச வேண்டிய விடயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

உலகில் ஒரு நாளைக்கு 8000 குழந்தைகளைக் கொல்லும் ஒரு வைரஸ்.

Image
உலகில் ஒரு நாளைக்கு 8000 குழந்தைகளைக் கொல்லும் ஒரு வைரஸ் உள்ளது, அதற்கு தடுப்பு மருந்து உண்டு அதன் பெயர் உணவு . ஆனால் இதைப் பற்றி எந்த ஊடகங்கள் எதுவும் பேசுவதில்லை. ஏனென்றால் பட்டினி என்பது பணக்காரர்களுக்கு வருவதில்லை.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முப்படைகள் மூலம் வானில் இருந்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

Image
நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நாளை முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மறுபுறம் கொரோனா பாதித்த நோயாளிகளை குணமாக்க மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதில் மருத்துவர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவது சோகத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வரை ஏராளமான மருத்துவர்களும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இத்தகைய கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு முப்படைகள் சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு முப்படை தளபதி பிபின் ராவத் வெளியிட்டிருந்தார். அதன்படி, ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் மேலே இந்திய விமானப்படை விமானங்கள் சீறிப் பாய்ந்து சென்றன. ...

ஐபோன் 12 விலை லீக் ஆனது உண்மையா? என்ன விலை ? எப்போது அறிமுகம்?

Image
ஆப்பிள் ஐபோன் 12 தொடரின் கீழ் வெளியாகும் iPhone 12 (மொத்தம் இரண்டு மாடல்கள்), iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max இன் விலைகள் லீக் ஆனது; என்ன விலை ? எப்போது அறிமுகம்? வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 12 தொடர் பற்றிய போதுமான அள்வு லீக் மற்றும் "கிட்டத்தட்ட அதிகாரபூர்வமான" தகவல்களை நாம் பார்த்துவிட்டோம் - கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட வடிவமைப்பு மற்றும் சில விவரக்குறிப்புகள் உட்பட. சரி, இப்போது வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 12 தொடரின் விலை நிர்ணயம் பற்றிய முதல் தடயங்களும் எங்களிடம் உள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலின்படி. ஆப்பிள் ஐபோன் 12 தொடரின் கீழ் ஒரு பிரீமியம் ஐபோன் ஒன்று அறிமுகம் ஆகலாம். அது 6.1 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 12 ப்ரோ ஆகும். அதன் விலை 999 அமெரிக்க டாலர்களாக இருக்கலாம், அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.75,800 ஆகும். இதேபோல ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆனது 6.7 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 1,099 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகம் ஆகலாம், அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.83,400 ஆகும். ஆனால் நிச்சயமாக இந்த இரண்டு ஐபோன்களிலும...

23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Image
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் றொசாந்தன் என்கிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அவரை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேடியபோது அவர் இன்று (03-05-2020) காலை அவருடைய கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தை தாயாரை இழந்த நிலையில் தன்னுடைய அம்மம்மா அம்மப்பா ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது இன்று காலை அவர்கள் கிணற்றுக்கு நீர் எடுப்பதற்காக சென்றபோது கிணற்றினுள் உடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் மேலதிக வி...

இதுவரை 1,748,020 பேருக்கு 5000 ரூபா சமுர்த்திக் கொடுப்பனவு.

Image
திடீர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பையடுத்து, இதுவரை 1,748,020 பேருக்கு 5000 ரூபா சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 8.05 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி சுட்டிக்காட்டினார். அதேவேளை 250,000 க்கும் மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு 5,000 வழங்க 12.62 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் கொடுப்பனவு வழங்குவதற்காக மற்றொரு குழுவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக மேலும் பலர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று மரணமடைந்துள்ளார்.

Image
வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றிய, கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று மரணமடைந்துள்ளார். குறித்த சிப்பாய் கடந்த மாதம் 22ம் திகதி முகாமிலிருந்து வீடு திரும்பி தனிமைப்படுதலில் இருந்துள்ளார். அதன்பின்னர் கடந்த 27ம் திகதி அவர் முகாமுக்கு திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் வீட்டில் தங்கியிருந்த சிப்பாயின் பாட்டி இன்று காலை மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது மரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

புனித ரமழான் மாதத்தில் புனித குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு PDF இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Image
புனித ரமழான் மாதத்தில் புனித குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு PDF இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  Tamil - Download

பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை.

Image
பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் எனினும் இதனை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் தீர்மானிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் கொரோனா வைரஸ் பரவலை மையமாகக்கொண்டு இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வாக்குகளை எண்ணும் பணிகள் ஒருநாளில் இடம்பெறலாம் என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார் தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று அடிப்படையிலேயே இந்த யோசனை ஆராயப்பட்டு வருகிறது. எனினும் பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவற்கான எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். ஒரு நாளில் சில மாவட்டங்களுக்கும் இன்னும் ஒரு நாளில் ஏனைய மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படலாம். இதற்கு எத்தனை நாட்களை ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். இதற்கிடையில் நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொறுத்தவரையில் தேர்தல் திகதியை மாற்றவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று அரசியல் கட்சிகளி...

700 ஐ கடந்தது கொரோனா இலங்கையில்.

Image
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரை 705 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நேற்றையதினம் இரவு 9 மணிக்குப் பின்னர் குறித்த 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 15 கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் கடற்படையினர் எனவும் ஏனைய 3 பேர் கடற்படையினருடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 526 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, 179 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 172 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பளையின் கெசல்வத்தை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டதனையடுத்து குறித்த கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

Image
கம்பளையின் கெசல்வத்தை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டதனையடுத்து குறித்த கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பளை நகரில் உள்ள அத்தியாவசிய தேவைகள், தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் தற்காலிகமாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை (04) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் நகருக்குவரும் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி கம்பளை நகர சபையின் பொது சுகாதார பிரிவினருடன் பொலிஸாரும் இணைந்து கம்பளை வைத்தியசாலை பஸ் மற்றும் ரயில் நிலையம் உட்பட மக்கள் கூடும் பொது இடங்களைச் தொற்று நீக்கம் செய்து வருகின்றனர். கலகம் அடக்க பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் கழுவி சுத்தப்படுத்தி தொற்று நீக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாய்க்கும் 425 கிராம் எடைகொண்ட ரின்மீனின் விலை 100 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது.

Image
மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்தா திசானநாயக்க கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய மைசூர் பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாய்க்கும் 425 கிராம் எடைகொண்ட ரின்மீனின் விலை 100 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, சீனிக்கான கட்டுப்பாட்டு விலையையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கடந்த வாரம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Image
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. எனினும், கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த 25 ஆம் திகதி இவர் முகாமுக்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்த காலப்பகுதியில் இவர் பலருடன் தொடர்பை பேணியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் வரை தொடர்பை பேணியுள்ளனர் என்றும், இவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், கடற்படை சிப்பாயின் மனைவி, பிள்ளைகளை தியத்தலாவை கொரோனா தொற்று தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிகில்கஸ்கட பொது சுகாதார பரிசோதகர் ராஜநாயக்க தெரிவித்தார். குறித்த கடற்படை சிப்பாய் முகாமுக்கு சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமே கொரோன தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரும் 11ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

Image
வரும் 11ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் மாணவர்கள் இன்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையியிலே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதேவேளை ஏற்கனவே மே 11ம் திகதி அனைத்து அரச பாடசாலைகளையும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

A/L மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களை இந்த இணையதளத்தில் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Image
A/L மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களை இந்த இணையதளத்தில் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதிரி வினாத்தாள் பாடங்கள். 1. Physics Paper 1 - Download 2. Chemistry Paper 1 - Download 3. Biology Paper 1 - Download 4. Geography Paper 1 - Download Paper 2 - Download Paper 3 - Download 5. Information Technology Paper 1 - Download 6. Tamil Paper 1 - Download Paper 2 - Download Paper 3 - Download 7. Islam Paper 1 - Download Paper 2 - Download

கொரோனா முற்றிலுமாக ஒழிவதற்கு குறைந்தபட்சம் இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.

Image
கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த நோய் தொற்று ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் மைக்கல் ஒஸ்டர்ஹோம் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது... முன்பு உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய இன்புளூன்ஸா வைரஸ் தொற்றைக் காட்டிலும் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஆரோக்கியமான மனிதர்களையும் கூட இந்த வைரஸ் தாக்குகிறது. இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகமே ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸை பொறுத்தவரை, அது முற்றிலுமாக ஒழிவதற்கு குறைந்தபட்சம் இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வரை இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது. எனவே, வைரஸ் மத்தியில் 2 ஆண்டுகள் வாழ்வதற்கு மக்களை அரசாங்கம் தயார்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள்.

Image
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அங்கு வாழும் பலர் தொழில்களை இழந்துள்ளனர். இன்னும் ஒரு பகுதியினர் சம்பளம் கிடைக்காது கஷ்டத்தில் வாழ்கின்றனர். தங்குவதற்குக் கூட சரியான இடமின்றி தவிக்கின்றனர். அன்றாட உணவுக்கே பிரச்சினையான நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறிகையில், “இந்த நிலையில், இலங்கையில் வாழும் தமது குடும்பங்கள் பற்றி அவர்கள் கவலை கொண்டுள்ளனர். சரியான தொடர்பாடல் வசதிகள் கிடைக்காமையினால், குடும்ப உறவுகள் தொடர்பில் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் தூதுவராலயங்கள் மூடப்பட்டுக் கிடப்பதால் அவற்றுடன தொடர்புகொண்டு, தமது பிரச்சினைகளைக் கூறுவதற்கு முடியாதுள்ளது. எனவே, இலங்கை அரசு இவர்களின் விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டும். இந்த நாட்டுக...

டாக்டர் கமல் ஒகுடா குரானில் இருந்த ஒரு வசனத்தின் காரணமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார்.

Image
டாக்டர் : கமல் ஒகுடா குரானில் இருந்த ஒரு வசனத்தின் காரணமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார் Dr. Kamal Okuda Converted to Islam Because of One Verse டாக்டர் :~ அட்சுஷி கமல் ஒகுடா " கியோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அமைப்பு பேராசிரியர் (ஜப்பானிய விஞ்ஞானி மற்றும் கல்வியாளர்) இஸ்லாத்திற்கு முந்தைய வாழ்க்கையை விளக்கினார்: அறியாமை ... உண்மை தெரியாது!" "இஸ்லாத்திற்கு முன்பு என் வாழ்க்கை காட்டுமிராண்டித்தனமாக இருந்தது வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு உணர்ந்தேன் அவர் சத்தியத்தைத் தேடும் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு மதங்கலை நீண்ட நாள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அவர் ஒரு நாள் ஒரு ஆவணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது குர்ஆனின் ஒரு வசனம் அவரது வாழ்க்கையை மாற்றியது. நான் தேடிக்கொண்டிருந்ததை இஸ்லாம் எனக்குக் கொடுத்தது "அச்சமயம்! நான் இஸ்லாத்திற்கு மாறினேன். இது என் வாழ்க்கையில் அல்லாஹ்விடம் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று நான் நம்புகிறேன்! ”.

நாய்க் குட்டிகள் விற்பனைக்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை.

Image
‘#நாய்க்_குட்டிகள்_விற்பனைக்கு’என்று எழுதியபலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை #குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர்.அதன்படியே ஒரு சிறுவன்,கடையின் முன் வந்து நின்றான். "நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். 1000ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று- கடைக்காரர் பதில் சொன்னார். நான்நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான். கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன. ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,"என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான். அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை.எனவே எப்போதும் முடமாகத் தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர். சிறுவனின் முகத்தில் ஆர்வம். ...

Nolimit உரிமையாளரின் மகத்தான சேவை.

Image
Nolimit உரிமையாளரின் மகத்தான சேவை! முழு மாதமும் தொழிலே செய்யாத 2500 இற்கும் மேற்பட்ட தமது சேவையாளர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கி வைத்த Nolimit உரிமையாளருக்கு கௌரவம் உரித்தாகட்டும். சில முதலாளிகள் அவர்களிடம் பல ஆண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?.. என்ன செய்கிறார்கள் ? .. அவர்களது நிலை என்ன? .. என்று சிறிதும் கணக்கிலெடுக்காத நிலையில் இவர் ஒரு மாமனிதர் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது.

கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்.

Image
கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார். வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர்! ஊடகங்கள் இருட்டடிப்பு... அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான் சில தினங்களுக்கு முன் கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI, தற்சமயம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான் உண்மையான ஒரே இறைவன்'' என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டதாக தெரிவித்தார். இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குர்ஆனை ஆராய்ந்தும் வந்தார். இதில் முக்கிய விஷயம் அவர் பார்த்தது குர்ஆனை மட்டும் அல்ல, 1500 வருடங்களாக துருக்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த பைபிள். அராமிக் என்னும் மொழியில் உள்ள அதை பற்றி வாடிகன் நகரத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதை ஆராய்வதற்காக அங்கு எடுத்துவரப்பட்டது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்...

இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்களின் எண்ணிக்கை.

Image
இன்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 2293 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவே இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும். இதுவரையில் இந்தியாவில் மொத்தமாக 37,336 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 71 மரணங்கள் பதிவாகியுள்ளன. கொவிட்-19 காரணமாக இந்தியாவில் அமுலாக்கப்பட்டுவரும் நாடு தழுவிய முடக்கம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ட்ரான் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

Image
ட்ரான் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. கொழும்பில் முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து விநியோகம் செய்தது. இதனையடுத்து மருந்து விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் முன்வந்து பதிவு செய்யலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம்.

Image
ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 17ம் தேதி அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்து ஏப்ரல் 17ம் தேதி அன்று வீடு திரும்பினார். இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயாளி பி.சி.ஆருக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை.

Image
ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக் நண்பரிடம் இருந்து இணைப்பு உட்பட்ட ஏமாற்றும் செய்தி ஒன்றை பெறுவார்கள். பயனர் அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் அது ஒரு போலியான பேஸ்புக் பக்கத்துக்கு அனுப்பப்படும். மேலும் பயனர் நற்சான்றுகளை உள்ளிட்ட பின் அது தாக்குபவரினால் கைப்பற்றப்படும். குறித்த பேஸ்புக் கணக்கை சமரசம் செய்தபின்னர் தாக்குபவர் அந்தக்கணக்கை பயன்படுத்தி அதன் நண்பர்களின் பட்டியலுக்கு ஒத்தவகையான செய்திகளை அனுப்புவார். இதனடிப்படையில் தாக்குதல்கள் தொடரும். எனவே பேஸ்புக்கில் நண்பர்கள் அனுப்பும் இணைப்புக்களை கிளிக் செய்வதை தவிர்க்குமாறு இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது. அத்துடன் பயனர் நற்சான்றிதழ்களை உள்ளிடும்போது உண்மையான பேஸ்புக் பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

கிண்ணியாவில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி.

Image
கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் ​நேற்று (1) மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான முகம்மது பாருக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

400 கிராம் பால் மா பைக்கற்றின் விலை 345 ரூபா முதல் 380 ரூபா வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Image
உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ கிராமின் விலை 85 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் புதிய விலை 945 ரூபாவாகும். 400 கிராம் பால் மா பைக்கற்றின் விலை 345 ரூபா முதல் 380 ரூபா வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை ரெம்டெசிவிர் என்ற மருந்து கட்டுப்படுத்துவதாக அமெரிக்க நிறுவனமான கிலியட் அறிவித்துள்ளது.

Image
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸை ரெம்டெசிவிர் என்ற மருந்து கட்டுப்படுத்துவதாக அமெரிக்க நிறுவனமான கிலியட் அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 3,392,718 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239,178 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் உலகநாடுகள் தீவிரம் காட்டியுள்ளன. இந்நிலையிலேயே, ரெம்டெசிவிர் என்ற மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக அமெரிக்க நிறுவனமான கிலியட் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் தொடர்ந்தும் கூறியுள்ளதாவது, “கொரோனா நோயாளிகளுக்கு வைரசுக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது. முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது. மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்” ...

விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்.

Image
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதன் பின்னர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாயின், விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய, செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, பரீட்சைகளை அடிப்படையாகக்கொண்டு 10 ஆம் தரத்திற்கு மேல் உள்ள தரங்களுக்காக மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருடன் கடந்த தினம் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேநேரம், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அனைத்து பாடசாலைகளிலும் கிருமிநீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு வழிகாட்டல் கோவை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாடசாலைகளை மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு தாம் தயார் என அன...

கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 பேர் கைது.

Image
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை நேற்றிரவு (30) கைது செய்துள்ளதாக கந்தளாய் வனஜீவராசி பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும், தேன் போத்தல்களும், மரை இறைச்சி வகைகள் மற்றும் கத்தி மண்வெட்டி போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் கந்தளாய், வான்எல, அக்போபுர, ஜயந்திபுர, பேராறு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை சேருவில பொலிஸார் ஊடாக இன்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இம்மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது. அதிகம் நோய் தாக்கும் வாய்ப்பு.

Image
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கமானது நாட்டில் பூச்சியத்தை அடையவில்லை. அடுத்த வாரங்களில் நிலைமை சுமுக நிலைமைக்கு மாறப்போவதில்லை என அறிவுறுத்தும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் அசித திசேரா இம்மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது. அவ்வாறு ஆரம்பிப்பதன் மூலமாக மாணவர்களை அதிகம் நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் தாக்கம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் என கூறப்படும் இந்த கொவிட் -19 வைரஸ் என்பது எம் அனைவருக்கும் தெரியவந்துள்ள புதிய நோயாகும். இதற்கு முன்னர் நாம் அறிந்துகொண்ட, எதிர்கொண்ட நோய்களில் கொவிட் -19 முற்றிலும் மாறுபட்ட தொற்றுநோயாகும். உலகிற்கே கொவிட் -19 வைரஸ் பற்றி நான்குமாத கால அனுபவமே உள்ளது. இந்த நான்கு மாதங்களில் எவ்வாறான தாக்கங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது என்பதை பார்த்து அதற்கு ஏற்றால் போலவே இப்போது வரையில் எமது முன்மொழிவுகள் அமைந்துள்ளது. முழு உலகிலும் இப்போது வரையில் 30 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கொவிட் நோயாளர்கள் என அடையாளம் கா...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் படி கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் கல்முனை வலயம் முதலிடத்தைப்பெற்றுச் சாதனை.

Image
அண்மையில் வெளியாகியுள்ள சாதாரண சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் படி கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் கல்முனை வலயம் முதலிடத்தைப்பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், எமது வலயத்திலுள்ள ௬௫ பாடசாலைகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றின. அவர்களுள் 79.33வீதமான பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் 14 ஆம் இடத்திலிருந்த நாம் இம்முறை12ஆம் இடத்தை அடைந்து இரு இடங்கள் முன்னேறியுள்ளோம். 77.69வீதத்தினைப்பெற்ற அக்கரைப்பற்றுவலயம், இரண்டாமிடத்தினையும் 75.57வீதத்தினைப்பெற்ற தெஹியத்தக்கண்டிய வலயம் 3ஆம், இடத்தினையும் பெற்றுள்ளது. இச்சாதனைக்காக உழைத்த முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். சம்மாந்துறை கல்வி வலயம் அகில இலங்கை மட்டத்தில் 83ஆம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தில் 12ஆம் இடத்தினைய...

குருதிக் கொடையாளர்கள் தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

Image
நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையின் காரணமாக தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால், குருதிக் கொடையாளர்கள் தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தேசிய இரத்த வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் வீழ்ச்சியேற்பட்டு வருகிறது. எனவே வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் போராடும் சகோதர இலங்கையர்களின் உயிர்களைக் காப்பதற்கு இரத்ததானம் அளிக்க விரும்பும் அனைவருக்குமான அறிவித்தலே இதுவாகும். நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, ஒரேநேரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் இரத்ததானம் செய்வதற்கு ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. எனவே இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 011 5332153 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அல்லது nbts.life என்ற இணையப்பக்கத்தின் மூலம் இரத்ததானம் அளிப்பதற்காக முன்பதிவு செய்து, நேரமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் வாகனங்களின் விலைகளும் 10 முதல் 15 சதவீதமாக அதிகரித்துள்ளன.

Image
இலங்கையில் அனைத்து வாகனங்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், அனைத்து வாகனங்களின் விலைகளும் 10 முதல் 15 சதவீதமாக அதிகரித்துள்ளன. ஜப்பான் யென் மற்றும் அமெரிக்க டொலருக்கும் நிகரான ரூபாவின் பெறுமதி சரிவடைந்துள்ளமையே வாகனங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பிற்கு காரணம். இதன் காரணமாக இதுவரை சொகுசு வரிக்கு உட்படாத ஆயிரம் குதிரை வலுவுக்கு குறைவான இயந்திரத்தை கொண்ட வாகனங்களும் அந்த வரிக்கு உட்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள புகையிரத சேவை.

Image
அத்தியாவசிய சேவைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள புகையிரத சேவைகளில் பயணிக்கவிருக்கும் அரச மற்றும் தனியார் அதிகாரிகள் உரிய நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக இணையதளம் மூலம் ஆசனங்களை பதிவு செய்ய வேண்டும் என்று புகையிரத திணைக்கள அதிகாரி எம்.ஜே.டி.பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , எதிர்வரும் திங்கட்கிழமை 4 ஆம் திகதி முதல் உரிய நிறுவனப்பிரதானிகளால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமையவே புகையிரத சேவை இடம்பெறும். அதாவது புகையிரதத்தில் பயணிக்கவிருப்போர் உரிய நிறுவன பிரதானிகள் மூலம் முன்னரே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இணையதளம் மூலம் (Online) பதிவு செய்பவர்களுக்கு அவர்களது ஆசன விபரங்கள் அவரவர் தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் புகையிரத திணைக்கள அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு ஆசனங்கள் பதிவு செய்யப்படாதவர்களுக்கு புகையிரதத்தில் பயணிக்க முடியாது. இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் மொபிடெல் இணைந்து ஆரம்பித்துள்ள இணையதளம் ஊடாக அடுத்த வாரம் முதல் ஆசனங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை நிறுவன பிரதானிகள் முன்னெடுக்க முடியும் ...

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார்.

Image
யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் இன்று வீடு திரும்பினார். சில வாரங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின்னர், இன்று தாயும் சேய்களும் வீடு திரும்பினர். இதன்போது வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று.

Image
ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு நேற்றிரவு (30) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் ஏலவே மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட ஒலுவில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் இயங்குவதாக தெரிவித்தார். கடற்படையினரால் பராமரிக்கப்படும் மேற்படி முகாமில் வத்தளை ஜா -எல சுதுவெல பகுதியைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த நால்வரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் மூலம் உடனடியாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

Image
இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார். சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கந்தளாய் நகரம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு கொரொனா தொற்றாளர்சென்ற வைத்திய நிலையம்,கடைகள் மூன்று போன்றவற்றுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Image
திருகோணமலை - கந்தளாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை பணிப்பாளர் மெலிண்டன் கொஸ்தா இன்று தெரிவித்துள்ளார். கந்தளாய் ரஜஎல பகுதியைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவரை மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு கடற்படை வீரர் விடுமுறையில் கந்தளாயிக்கு சென்ற நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கந்தளாய் தள வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பிய நிலையிலே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கந்தளாய் நகரம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு கொரொனா தொற்றாளர்சென்ற வைத்திய நிலையம்,கடைகள் மூன்று போன்றவற்றுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் விடுறை இரத்துக் காலமானது மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Image
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரத்துச்செய்யப்பட்டுள்ள விடுமுறைக் காலமானது நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி பொலிஸாரின் விடுறை இரத்துக் காலமானது மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னர் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்துக் காலமானது மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் குறித்த விடுமுறை இரத்துக் காலமானது ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, 30 ஆம் திகதி வரை நீடித்து ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே தற்போது மீண்டும் மே மாதம் 15 ஆம் திகதி வரை அனைத்து பொலிஸாரின் விடுறைக் காலமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.

Image
மட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் 22 வயதான இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கள் கிழமையன்று சமூர்த்தி பணத்தினை பெற்று மனைவியிடம் வழங்கிவிட்டு தானும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இறந்தவரின் மனைவி தெரிவித்தார். இதேவேளை குறித்த நபர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் பின்னர் மனைவியின் பொலிஸ் முறைப்பாட்டின்படி சமதானப்படுத்தும் செயற்பாடு இடம்பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. குறித்த நபர் தீ மூட்டி எரிந்து கொண்டிருப்பதனை அவதானித்த பொதுமக்கள் கல்குடா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து அங்கு இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.